விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 460 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 51,888 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுவரை 364 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை மட்டும் 301 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 48,363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3162 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.