விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் கொரோனா இறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றும், இறப்பும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது;
கொரோனா ( மாதிரி படம்)
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 490 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது, இதவரை 28,282 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை198பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 678 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 24,774 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3310 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்துகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.