விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-02-10 00:27 GMT

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்ரு புதன்கிழமை ஒரே நாளில்,  37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை, 54,284 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாவட்டத்தில் இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று புதன்கிழமை மட்டும் 257 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 52,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்;  மீதமுள்ள 1,181 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News