விழுப்புரம் அருகே கொரோனா- ஒமைக்ரான் சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள கொரோனா-ஒமைக்ரான் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
விழுப்புரம் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா- ஒமைக்ரான் சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் த. மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 246 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.