விழுப்புரத்தில் 25ம் தேதி 203 பேருக்கு கொரோனா 2 பேர் இறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,480 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 101 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறப்பு, இதுவரை 118 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.