விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக லேசான முதல் கனமான மழை வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று மதியத்திலிருந்து இடைவிடாது மழை பெய்வதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெயில் வறுத்த எடுத்த நிலையில் இந்த மழை மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.