விழுப்புரத்தில் மின்சார வாரியம் சார்பில் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம்
விழுப்புரத்தில் மின்சார வாரியம் சார்பில் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறைகேட்பு கூட்டம் மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மின் நுகர்வோர்கள் பலர் கலந்துகொண்டு மின் பாதை மாற்றம், விவசாய மின் இணைப்பு, குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்தல், வீட்டு மின் இணைப்பு சர்வீஸ் வழங்குதல், மின் கம்பத்தை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
இம்மனுக்களை பெற்ற மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் சைமன் சார்லஸ், உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், அண்ணாதுரை, சம்பத்குமார், பிரசன்னா, சுந்தர் மற்றும் அனைத்து உதவி பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.