நமக்கு நாமே திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நமக்கு நாமே திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்துதல் குறித்து வங்கி மேலாளர்கள், வணிகர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் விழிப்புணர்வு மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.