விழுப்புரம் கலெக்டர் தலைமையில் மெகா தூய்மைப் பணி பற்றிய ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெகா தூய்மைப் பணி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (30.05.2022) நகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல் தொடர்பான மெகா தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காஞ்சனா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.