விழுப்புரத்தில் நகர்ப்புற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்-2021 வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.