விழுப்புரத்தில் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அரசு திட்ட பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொண்டார். மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித் ஆகியோர் உடனிருந்தனர்.