மாணவர்கள் படிக்கட்டு பயணம் குறித்த ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பேருந்துகளில் படியில் பயணம் செய்யும் மாணவர்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படியில் பயணம் செய்யும் மாணவர்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், படியில் பயணம் செய்யும் மாணவர்களை கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை,அரசு போக்குவரத்து கழகம்,வட்டார போக்குவரத்துறை மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.