வாக்கு எண்ணிக்கை மைய முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை அன்று முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான த.மோகன் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.