பா.ஜ.க.வை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் சத்யாகிரக போராட்டம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டம் நடத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் பல மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் கேள்வி எதுவும் கேட்காமல் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தொடர் விசாரணைக்கு அலைக்கழித்துள்ளதை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்தும், சோனியாகாந்தியை இந்த விசாரணையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் அமைதிவழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், சேகர், ரவி, சர்தார்கான், வீராசாமி, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் முபாரக்அலி, நகரமன்ற கவுன்சிலர் இம்ரான்கான், ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் காஜாமொய்தீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.