கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இழப்பீடுத் தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.;

Update: 2021-10-29 17:15 GMT

நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட குழந்தைகள்.

விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நிவாரண நிதியுதவிக்கான காசோலையினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர். லட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கணேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News