ஊட்டச்சத்து மாத கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத கண்காட்சியை கலெக்டர் மோகன் திறந்து வைத்தார்.;

Update: 2021-09-06 16:25 GMT

ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மோகன் திறந்து வைத்து பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News