ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதியை ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

Update: 2022-02-07 13:30 GMT

தேங்காய்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற  மாவட்ட ஆட்சியர் மோகன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தேங்காய்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் 1 கிலோ மீட்டர் தொலைவு வயல் வரப்பு வழியாக நடந்து சென்று அப்பகுதியை பார்வையிட்டார்

அப்போது அங்கு குடியிருக்கும் பழங்குடி இருளர் இன மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார், இப்பகுதியில் வசிக்கின்ற அனைத்து இருளர் குடும்பங்களுக்கும் புதிய பட்டா வழங்கிடவும், அரசு இலவச வீடு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது அனைத்துதுறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News