ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு ஆதார் இ சேவை மையத்தில் (30.06.2022)மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்காக சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று மற்றும் முதல்தலைமுறை பட்டதாரி சான்று உள்ளிட்டவைகள் வேண்டி அரசு இ - சேவை மையத்தில் விண்ணப்பித்தால், அவர்களின் விண்ணப்பித்திற்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.