விழுப்புரம் குடியரசு தினவிழாவில் ஜே.ஆர்.சி புத்தகம் வெளியீடு
விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் முன்களப் பணியாளர்கள் என்ற புத்தகம் வெளியிட்டனர்;
தன்னார்வ முன் களப்பணியாளர் என்ற புத்தகத்தை வெளியிட்ட கலெக்டர் மோகன்
விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விழுப்புரம் சமூக ஆர்வலரும்,ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனருமான முனைவர் ம.பாபு செல்வதுரை தொகுத்து வழங்கிய தன்னார்வ முன் களப்பணியாளர் என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் த.மோகன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இப்புத்தகத்தில் கடந்த ஆண்டுகளில் ஜே ஆர்.சி கன்வீனருடன் அமைப்பின் ஆலோசகர்கள் கொரோனா கால களப்பணிகளின் பதிவுகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வு தகவல்கள். மற்றும் மேற்கொண்ட நல திட்ட உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசின் திட்டம் சார்ந்த விழிப்புணர்வு பரப்புரை, வாக்காளர் விழிப்புணர்வு பட்டரைகள், ஆகியவை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்து கொண்ட விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். இரா. லட்சுமணன் ஆகியோர் பாபு செல்வதுரையை நேரில் வாழ்த்தியதோடு. பள்ளிக் கல்வித்துறை ஜே.ஆர்.சி அமைப்பால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கிவைத்தனர். மேலும் பள்ளி கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. கோ. கிருஷ்ணப்பிரியா அவர்களும் ஆசிரியரை வாழ்த்தி பாராட்டினார்,
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் பி.சுந்தரமூர்த்தி, திண்டிவனம் G. கிருஷ்ணன், நேர்முக உதவியாளர் இல. பெருமாள். கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசப்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் காவல்துறை மற்றும் இதரத் துறை அலுவலர்களும், சமுக ஆர்வளர்களும் தொகுப்பாசிரியரை பாராட்டினர். இவர் கடந்த சுதந்திர தின விழாவில் இரத்தமும் தானமும் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.