விழுப்புரத்தில் வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் மோகன்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆட்சியர் மோகன் வாக்குச்சாவடி மையப் பட்டியலை வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் மோகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற,எம்.பி. தொகுதிகளுக்கான 1962 வாக்குசாவடி பட்டியலை வெளியிட்டு,
இதில் வாக்குசாவடி அமைவிடம், இடமாற்றம் ஆகியன குறித்து புகார் இருந்தால் வருகின்ற 6/9/22 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அல்லது திண்டிவனம் சார் ஆட்சியர், விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய கோட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம் என அப்போது தெரிவித்தார், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனா்.