பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் சான்றிதழ் வழங்கினார்.;
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரது பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவியருக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசிற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட கலெக்டர் த.மோகன் வழங்கி, மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
அப்போது தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சத்தியப்பிரியா உடனிருந்தனர்.