விழுப்புரம் நகராட்சி பகுதியில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள அய்யனார் கோவில் குளத்திற்கு நீர்வரத்து வாய்க்கால் கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-11-28 11:30 GMT

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. ஆனால் அம்மா குளம், அய்யனார் குளம் ஆகியவை நீர்வரத்து இல்லாமல், நிரம்பவில்லை என  மக்களிடையே தொடர்ந்து  புகார் எழுந்தது.

இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் மோகன் அய்யனார் குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், அங்கு உள்ள நீர்வரத்து வாய்க்கால் குறித்து கேட்டறிந்தார், அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News