தளவானூர் தடுப்பணை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணை மீண்டும் உடைந்ததால் அந்த பகுதியை ஆட்சியர் நேரில் இன்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக, தளவானூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீண்டும், மீண்டும் உடைந்தது,
மேலும் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து கரையை உடைத்து கொண்டு அருகில் உள்ள ஊருக்குள் நீர் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும் என்ற அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் அச்சம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை ஆட்சியர் நேரில் சென்று இன்று ஆய்வு செய்து முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்தார்.