விழுப்புரம் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களுக்கான விடுதியினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
விழுப்புரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினர் மூலம், அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவியர்களுக்கான விடுதியினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அவர், மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி வருவதை பார்வையிட்டு உணவு தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தயாரிக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டதுடன் விடுதியில் உணவு பொருட்களின் இருப்பு குறித்து விவரம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தினசரி உணவு பட்டியலின்படி, மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் உணவு கூடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள மாணவிகளிடம் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவு தரமாகவும், ருசியாகவுள்ளதா என கேட்டறிந்து, விடுதியில் அத்தியாவசிய தேவை ஏதேனும் வழங்க வேண்டியுள்ளதா என கேட்டறிந்தார்.
மாணவிகள் அனைவரும் நாள்தோறும் நூலகத்தில் தினசரி,மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்த புத்தகங்கள் படிக்கும் வகையில் கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் ரகுபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அறிவழகி, விழுப்புரம் வட்டாட்சியர் ஆனந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.