தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் அருகே தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையின் காரணமாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதை மாவட்ட கலெக்டர் த.மோகன் பார்வையிட்டார்.
அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆற்றின் கரையோரப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக பெரிய கருங்கற்கள் கொண்டு தடுப்பு வேலி அமைத்திட கனிமவளத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அருகில் கனிமவளம் மற்றும் புவியியல்துறை உதவி இயக்குநர் (பொ) சுந்தர்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.