விழுப்புரத்தில் இயங்கும் பட்டாசு கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
விழுப்புரம் நகரத்தில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் கலெக்டர் மோகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்
விழுப்புரம் நகரத்தில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் மாவட்ட கலெக்டர் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்,
அப்போது பிரகாஷ் என்பவர் கடையில் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை அனுமதியின்றி இருப்பு வைத்திருந்ததை கண்டறிந்த கலெக்டர் அந்த கடைக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடைக்கு கடைக்கு சீல் வைத்தனர்.