கொடிநாள் வசூல்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் கொடி நாள் வசூலை கலெக்டர் இன்று தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் கொடிநாள் வசூலை மாவட்ட கலெக்டர் மோகன் உண்டியலில் நிதி செலுத்தி வசூலை தொடங்கி வைத்தார்.
செவ்வாய்க்கிழமை (07.12.2021) அன்று மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக படைவீரர் கொடிநாள் 7 டிசம்பர் - 2021 முன்னிட்டு, கொடி நாள் நிதியை மாவட்ட கலெக்டர் த.மோகன் உண்டியலில் பணம் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.