விழுப்புரம் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

Update: 2022-02-27 08:00 GMT

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை  தாங்கி இன்று தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, இலட்சுமணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர்.பொற்க்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா , கவுன்சிலர் ஜெயந்தி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

முகாமில் தன்னார்வப் பணியினை ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி)மாவட்டக் கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை தலைமையில் பல்வேறு நிர்வாகிகள்  மேற்கொண்டனர்.

மேலும்   முகாமில் மக்களுக்கு போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  போலியோ நோயின் தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாடல்களை ஜே.ஆர்.சி கலைக்குழுவினர் முகாமில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் 

Tags:    

Similar News