விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சுதந்திர கொடியை ஏற்றினார்

75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2022-08-15 13:45 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை மைதானத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார்

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தொடர்ந்து அமைதிக்கான புறாக்களை பறக்கவிட்டு பலூன்களையும் பறக்கவிட்டார், தொடர்ந்து மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து சுதந்திர தின தியாகிகளை பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் மோகன், கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் துறை, சிறுபான்மை நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 198 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 மதிப்பில்  நலத்திட்டங்களை வழங்கினார்.


தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News