மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள்: ஆட்சியர் தகவல்
Collector informed that 5 lakh saplings will be planted in Villupuram district
பசுமை தமிழகம் உருவாக்குதல் திட்டத்தின்கீழ்5 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்ட தகவல்: விழுப்புரம் மாவட்டத்தில், பசுமை தமிழகம் உருவாக்குதல் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 23.69 சதவீதம் உள்ள பசுமை போர்வையை 33 சதவீதமாக உயர்த்த வேண்டி மாவட்டம் முழுவதும் 2022 & 2022-ம்வருட நிதியாண்டில் 5 லட்சம் மரக்கன்று நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை அனைத்து அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை வனவியல் வனவிரிவாக்க மைய விளம்பர அலுவலர் முருகானந்தன் வசம் 94884 72656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.