தார்ச்சாலை போடும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
Villupuram News - Collector inspects the work of putting up the laying road;
Villupuram News - விழுப்புரம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மூலம் இ.எஸ் கார்டன் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், பொது நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையி லிருந்து இ.எஸ்.கார்டன் பகுதி வழியாக நகர் பகுதிக்கு செல்லும் தார் சாலையில் 320 மீ நீளத்திற்கு புதியதாக தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் திருமதி.தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2