வாக்காளர்களுக்கு பூத் சிலிப்- கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2021-04-05 11:04 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (6 ம் தேதி) நடக்கிறது.இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெரு மற்றும் வளவனூர் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதை வீடு, வீடாக சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

Tags:    

Similar News