குண்டும் குழியான சாலை: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் குண்டும் குழியான சாலை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;

Update: 2021-12-14 16:40 GMT

குண்டும் குழியுமான சாலையை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் 

மாவட்ட கலெக்டர் மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் விழுப்புரம் நகராட்சி, பாண்டி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட நேருஜி சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கன மழையினால் சிமெண்ட் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதை நேரில் பார்வையிட்டு , சாலையை செப்பனிடும் பணியினை விரைந்து மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News