உலக தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தாய் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-05 07:29 GMT

தாய் பால் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு பெண்களுக்கு தாய் பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ்,ம மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குந்தவைதேவி,  மாவட்ட ஊரக வளர்ச்சி, திட்ட முகமை திட்ட இயக்குனர் பூ.காஞ்சனா, நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News