விழுப்புரம் மாவட்டத்தில் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து- கலெக்டர் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் குறைதீர்ப்பு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.01.2022 அன்று திங்கள் கிழமை முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெறும் நிகழ்ச்சிகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்திடும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெறும் நிகழ்ச்சிகள் 10.01.2022 திங்கள் கிழமை முதல் மறு அறவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மற்றும் இதர குறைதீர்க்கும் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வழங்குவதையும், வருகை தருவதையும் தவிர்க்க வேண்டும்,மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய கோரிக்கைகள் இருக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் அலுவலகங்களில் சார் ஆட்சியர்,கோட்டாட்சியர் அமைக்கப்படும் புகார் மற்றும் வட்டாட்சியர் ஆகிய இடங்களில் வைக்கப்படும் புகார் பெட்டிகளில் மனுக்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பெட்டியில் செலுத்தும் மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.