கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-11-02 16:05 GMT

விழுப்புரம் ஆட்சியர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கடலோர எல்லைப்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் த.மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகவே, மாவட்டத்தை ஒட்டியுள்ள கடலோர மீனவ பகுதிகளில் வசிக்கும் எவரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும் இப்பகுதியில் வசிக்கூடிய மீனவமக்கள் அனைவரும் தங்களுடைய மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளவும். கனமழையின் போது உயிர்சேதங்களை தவிர்க்கும்பொருட்டு தங்களுடைய பகுதிக்கு அருகாமையில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு  செல்லுமாறு மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ  முட்டுக்காடு, தாழங்காடு, வசவன்குப்பம், கைப்பணிக்குப்பம், அசப்பூர், வன்னிப்பேர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களை நேரில் சந்தித்து தொடர்மழை காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விரிவாக ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

Tags:    

Similar News