விழுப்புரத்தில் இடி விழுந்து தீப்பிடித்து எரியும் தென்னைமரம்
விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் கனமழை பரவலாக பெய்து வருகிறது;
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,இது மாவட்ட மக்களுக்கு கொளுத்தும் வெயிலில் இருந்து சற்று இதமளித்தது. இந்நிலையில் திடீரென மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் விழுப்புரம் அருகே உள்ள கடையம் கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியதில் அந்த கனமழையிலும் பச்சையம் தீப்பிடித்து எரிந்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.