விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு சுற்றுச்சூழல் பசுமை விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்

Update: 2022-06-04 07:33 GMT

மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக பசுமை விருதும் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

இதன்படி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம்  இந்த விருதினை  பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News