விழுப்புரத்தில் ஜே.ஆர்.சி சார்பில் தூய்மைப் பணி விழிப்புணர்வு இயக்கம்

தூய்மைப் பணியை வலியுறுத்தி ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்;

Update: 2022-06-04 10:30 GMT

ஜேஆர்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் பொன்முடி தொடக்கி வைத்தார் 

ஜேஆர்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்க  விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது

விழுப்புரம் மாதாக்கோவில் எதிரில் மாவட்ட ஆட்சியர் த. மோகன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு ஜேஆர்சியின் தூய்மைக்கான மக்கள்இயக்கத்தை  தொடஙகி வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள். டாக்டர். இரா. லட்சுமணன், ந புகழேந்தி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா, நகர் மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி,, நகராட்சி ஆனைணயர், ஜேஆர்சி மாவட்ட கன்வீனர் முனைவர் மா. பாபு செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் விழுப்புரம் ஜூனியர் ரெட்கிராஸ் கலைக் குழுவினர் என் குப்பை என் பொறுப்பு என்ற கருத்தினை மக்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜி.சின்னப்பராஜ் தலைமையில் பாடல் எழுதி, இசையமைத்து ஏ.எட்வின்,எஸ். சரசு, ர. ரெஜினா மேரி ஆகியோர் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பாடலை கோட்ட  மாவட்ட ஆட்சியர்  பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Tags:    

Similar News