விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்றத் தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2022-03-09 14:23 GMT

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்றத் தலைவர் பி.தமிழ்ச்செல்வி திடீரென ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் நகர்மன்ற கூடம், பொறியியல் துறை, வருவாய் துறை, பொது சுகாதாரதுறை, நகரமைப்பு, கணக்கு, பொது மற்றும் நில அளவு துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை நகர மன்ற தலைவர் பி.தமிழ்ச்செல்வி மற்றும் நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக்அலி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது நகராட்சி ஆணையர் போ.வி சுரேந்திர ஷா, வருவாய் அலுவலர் நந்தகுமார், நகர அமைப்பு அலுவலர் வெங்கடேசன் உட்பட நகர மன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News