விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமையில் தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது, போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாபுதின் தலைமை தாங்கினார், மறியலில் சிபிஐ மாநில குழு உறுப்பினர் ஏவி.சரவணன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர், அதனை தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.