கிராமத்தின் மத்தியில் ரசாயன கழிவா? பொதுமக்கள் பீதி:நடவடிக்கை தேவை

Chemical Waste- விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தின் மத்தியில் யாரோ கொட்டிய ரசாயன கழிவுகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.;

Update: 2022-07-23 02:45 GMT

கிராமத்தின் மத்தியில் கொட்டப்பட்டுள்ள ரசாயன கழிவு.

Chemical Waste- ரசாயன கழிவு?களால்  4 பேர் பாதிப்பு 

அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை தேவை 


விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் கிராமத்தில்  ரயில் நிலையம் உள்ளது.இதன் அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் பொது இடங்களில் லாரிகள் மூலம் மண் போன்ற கலவை கொட்டப்பட்டுள்ளது. அதனை கிராம மக்கள் பார்த்தபோது அவை நீலநிறத்திலும், கருப்பு நிறத்தில் இருப்பதும், அவற்றில் இருந்து வெளியேறும் துகள்களால் கண் எரிச்சல், தொண்டை வலி ஆகியவை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

இவை ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாக இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். கெமிக்கல் கழிவுகளை லாரிகள் மூலம் ஏற்றி வந்து கிராமத்தின் மத்தியில் கொட்டியதால் ரசாயன பவுடர் படிந்து அதே கிராமத்தை சேர்ந்த வருனேஷ் (2), தமிழ் (5) ஆகிய குழந்தைகளும் மற்றும் காந்திமதி, வள்ளி ஆகியோரும் மூச்சு திணறல், தொண்டை வலி, கண் எரிச்சல் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து இவை எத்தகைய ரசாயன கழிவுகள் என்பதை கண்டறிந்து, இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் எனவும், அதேநேரத்தில் அவற்றை உடனடியாக அகற்ற தேவையானநடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News