தகுதியற்ற பயனாளிகள் 6 பேரின் இலவச வீடு கட்ட வழங்கிய பணி ஆணை ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் 6 பேரின் இலவச வீடு கட்ட வழங்கிய பணி ஆணையை கலெக்டர் ரத்து செய்து உத்தரவிட்டார்.;

Update: 2022-01-28 17:26 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஆழியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கடந்த19.01.2022 அன்று கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அபபோது, ஆழியூர் ஊராட்சிக்கு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) திட்டத்தின்கீழ் (PMAY-G) 2021 -22 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர்களுக்கு 23 வீடுகளும், இதர பிரிவினற்கு 10 வீடுகள் என மொத்தம் 33 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கள ஆய்வில் சித்ரா , தெய்வநாயகம், கௌரிவேல் , வரலட்சுமி  ஆகிய 4 பயனாளிகளுக்கு உரிய விதிமுறைகளின்படி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

பூமா , சாமிநாதன் , சுப்புராயன் , பூங்காவனம், பத்ராசலம்  மற்றும் ஆறுமுகம்  ஆகிய 6 பயனாளிகளுக்கு சொந்த வீடு இருந்தும் தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது. விதிமுறைகளின் படியில்லாமல், தகுதியற்ற அந்த 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை உடனடியாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டார்.

முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்த அலுவலர்கள் மீது அரசு விதி முறைகளுக்குட்பட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்க திட்ட இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News