விழுப்புரம் நகராட்சியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி பிரச்சாரம்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.