விழுப்புரம் நகராட்சி பகுதியில் 10 இடங்களில் கேமரா பொருட்கள்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 10 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டன.;
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கினால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த அனைத்து மாவட்டங்களிலும் நகரங்கள், கிராமப்புறங்களிலும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் அடுத்த மாதம் செப்டம்பர் 2-ந் தேதி விநாயகர் சிலைகள், வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் விழுப்புரம் நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல்துறை, விழுப்புரம் மேற்கு, நகரம், தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்கள் மூலம் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகேயும், நேருஜி சாலை வீரவாழியம்மன் கோவில் அருகிலும் மற்றும் பழைய பஸ் நிலையம் முன்பாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் இதனை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் திறந்து வைத்து கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதத்தை சிசிடிவி., மூலம் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், கணேசன், அகிலாண்டம், போலீசார் ஹரிகுமார், விஜயகுமார், சதீஷ், நீலகண்டன் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.