விழுப்புரம் அருகே கட்டிட மேற்பார்வையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
Road Accident News -விழுப்புரம் மாவட்டம், எம்.குச்சிபாளையம் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த புதுச்சேரி கட்டிட மேற்பார்வையாளர் சிகிச்சை பலனின்றி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.;
Road Accident News -புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(வயது 40). கட்டிட மேற்பார்வையாளரான இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் மலட்டாறு பாலம் அருகில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயத்துடன் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பார்த்தசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2