விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தானம்
விழுப்புரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மருத்துவஅணி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம், தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் 30 நபர்கள் இரத்த தானம் அளித்தனர். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் தலைமையிலான ஊழியர்கள் அவற்றைசேகரித்து பெற்று கொண்டனர்.