ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்ய பாஜக கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ள செயலாளர்களை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய கலெக்டரிடம் பாஜக கோரிக்கை மனு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சி செயலர்களை சுழற்சிமுறையில் இடமாற்றம் செய்ய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் இன்று மாவட்ட கலெக்டர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.