வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சட்டங்கள் (திருத்தம்) குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளதை எதிர்த்து விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி பிரதான கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை. தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் என்.சி.பி. சங்கம் ஏ.ஐ.பி.இ.ஏ., சங்கம் மற்றும் 5 சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.