விழுப்புரத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பரப்புரை
ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் குட் சமாரிட்டன் சட்ட விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது;
நிகழ்ச்சியில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகளை ஜே.ஆர்.சி கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை வழங்கினார்
தமிழ் நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்ட நம்மைக் காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம் சார்ந்த தெளிவான புரிதலை கிராமப்புற மக்கள் மத்தியில் ஏற்படுத்திடும் விதத்தில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூரில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம்.ஜே.ஆர் சி மாவட்டக் கன்வீனர் முனைவர். ம பாபு செல்வதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மக்களிடம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் முதல் 48 மணி நேரத்திற்கான கட்டணமில்லா சிகிச்சை எல்லாரும் பெறலாம் என்பதையும் அத்துடன் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருந்தாலும் Golden hour. Golden Time என்பதை மனதில் கொண்டு உடனே அவருக்கு உதவிடும் வகையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சேர்த்திட உறுதி ஏற்போம்.
அத்துடன் சாலை விபத்திற்குள்ளான நபருக்கு உதவுபவருக்கும் சட்டரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது வகையில் Good Samaritan Law இருக்கிறது என்பதை தெளிவு படுத்தி பொதுமக்களுக்கு பரப்புரை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகளை ஜே.ஆர்.சி கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை வழங்கினார். உடன் ஊராட்சி செயலர் ஆதி.சங்கர் மற்றும் மருத்துவ முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுடன் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.